Breaking News
Home / Prasanthraj Soundararajan

Prasanthraj Soundararajan

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (TSSA) கோடை கால விளையாட்டு விழா நேற்று 28.08.2017 அன்று Raynes Park எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல தமிழ் பாடசாலைகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டிருந்ததுடன் Cricket, Netball, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றிருந்தன இதே …

Read More »

உலக நாடுகளை மிரட்டும் வடகொரியா! பிரித்தானியா எடுத்த தீர்மானம்

வடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வடகொரியா ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடகொரியா முன்னெடுதுள்ள ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த சீனா அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், …

Read More »

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் …

Read More »

ஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்..! பெரும் தொகை அபராதமாக விதிப்பு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆனதற்கு ஓவியாதான் காரணம். அவர் வெளியேறிய பிறகு நிகழ்ச்சி டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. பிக்பாஸ் விதிமுறைப்படி அதில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்கள் வரை அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். மேலும் பிக்பாஸ் விளம்பரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அப்படி விதிமுறையை மீறினால் ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இதனால்தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய …

Read More »

இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் – UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம்  மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் …

Read More »

நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சர்வதிகார அரசு. படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் …

Read More »

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது அமெரிக்காவின் பார்வையில் குற்றவாளியாக கருதப்பட்டவர் கடாபி, இவருடனான மஹிந்தவின் உறவினை சர்வதேசம் ஆராயாமல் விட்டிருக்காது.   அதுமட்டுமல்லாது கடாபிக்கும் மஹிந்தவின் புதல்வருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் அமெரிக்கா ஆராய்ந்து இருக்கும், இவர்கள் மீதான குற்ற கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும். இப்போது அவர்களாய் ஒத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இல்லையேல் …

Read More »

வங்கியில் பணியாற்றி மோசடி செய்த யுவதிக்கு 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

பல்கலைக்கழகம் செல்லும் வரையில் வங்கி ஒன்றில் பணியாற்றி பண மோசடி செய்த யுவதி ஒருவருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் 18 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவியருக்கு மக்கள் வங்கியில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படுகின்றது. இவ்வாறு பணிக்கு சென்ற யுவதி ஒருவர் சுமார் முப்பது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த …

Read More »

இலங்கையில் பிளாஸ்டிக் கோழிமுட்டைகள்

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள், அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும் தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் …

Read More »

யாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விவகாரத்தில் திடீர் திருப்பம்

யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில் நீரில் கலப்பதற்கு காரணமானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ். சுன்னாகத்திலும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலப்பதற்குக் காரணமான மின் பிறப்பாக்கி நிறுவனத்தை கண்டறிந்து, அதன் அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுன்னாகத்திலும், அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் பொதுச் …

Read More »