Breaking News
Home / Sports

Sports

தாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் ஆடுகளத்தில் அதிரடியில் மிரட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டை போலவே காதல் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். டிவில்லியர்ஸ் டேனியலி ஸ்வார்ட் என்பவரை 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது 5வது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுக் கொண்டிருந்த போது அவர் டேனிலியை மணந்தார். அனைவரையும் போன்று இவர்களின் காதல் வாழ்க்கையும் அழகானது. இவர்கள் இருவரின் குடும்பமும் மிக நெருங்கி …

Read More »

சொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே

ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய பூனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது தொடரின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடிவரும் மும்பை அணி இவ்வருடம் பூனே அணியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை அந்த அணியை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. நேற்றைய போட்டி மும்பையின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி பூனே அணி சார்பில் ஆரம்ப …

Read More »

இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே!

ஐ.பி.எல்.தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பூனே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என்பதுடன், தோல்வியடையும் அணி ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More »

ஐ.பி.எல். தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நான்கு அணிகள்?

இந்த வருட ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன இந்த தொடரின் லீக் போட்டிகளின் 10 போட்டிகளில் வெற்றிபெற்று  20 புள்ளிகளுடன் மும்பை அணி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன், 18 புள்ளிகளுடன் பூனே அணி இரண்டாவது இடத்திலும், 17 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதன் அடிப்படையில் …

Read More »

குஜராத்தை வீழ்த்தி தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியது ஹைதராபாத்!

ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளது இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் ஆரம்ப ஜோடியான ஸ்மித் மற்றும் இசான் கிசன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 111 ஓட்டங்களை குவித்தனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குஜராத் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டஙக்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. …

Read More »

கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஓவ் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது பஞ்சாப்

பிளே ஓவ் சுற்­றுக்­கான வாழ்வா? சாவா? போட்­டியில் கொல்­கத்தா அணியை 14 ஓட்­டங்­களால் வீழ்த்­தி­யது பஞ்சாப். இதன் மூலம் தொட­ரி­லி­ருந்து பிளே ஓவ் சுற்று வாய்ப்பை தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது. கொல்­கத்தா நைட்­ரைடர்ஸ், – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மொஹா­லியில் நேற்று நடை­பெற்­றது. இந்த போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வாழ்வா? சாவா? என்­ப­தாக அமைந்­தது. இதில் தோல்­வி­ய­டைந்தால் பஞ்சாப் அணி பிளே ஓவ் வாய்ப்பை இழந்­து­விடும் …

Read More »

15 பந்துகளில் அரைச்சதம் அடித்து சாதனைப்படைத்த சுனில் நரைன்

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சுனில் நரைன் ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக அரைச்சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் 15 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன், 4 ஆறு ஓட்டங்களையும், 6 நான்கு ஓட்டங்களையும் விளாசியுள்ளார். பந்துவீச்சளரான நரைன் அதிவேகமாக அரைச்சதம் கடந்துள்ளமை இரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2014 …

Read More »

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணி சற்றுமுன்னர் அறிவிப்பு

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது நிய­மிக்­கப்­பட்ட நிர்­வாகக் குழு சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­கான இந்­திய அணியை உட­ன­டி­யாக அறி­விக்க வேண்டும் என உயர் நீதிமன்றம்  கிரிக்கெட் சபை நிர்­வா­கி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டிருந்தது. இதன்படி சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியை நிர்­வாகக் குழு  இன்று அறிவித்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியின் முழு விபரம் :  1. விராட் கோஹ்லி (அணித் தலைவர்) …

Read More »

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சச்சின், ட்ராவிட்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டுமென முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராஹூல் ட்ராவிட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் வீரர்கள் இந்தியா இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க வேண்டுமென தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். சஹிர் கான், குண்டப்பா விஸ்வநாத், சஞ்சய் மஞ்ரேகர், ஆகாஸ் சோப்ரா, அஜித் அகார்கர், வெங்கடேஸ் பிரசாத், சபா கரீம், முரளீ கார்த்திக் மற்றும் தீப் …

Read More »

பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் அரவிந்த ?

இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் இந்நிலையில் இராஜினாமா கடிதத்தை அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக கிரிக்கெட் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை, அரவிந்த டி சில்வாவின் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட காரணங்களுக்காவே …

Read More »