Breaking News
Home / Uncategorized

Uncategorized

இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் – UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம்  மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் …

Read More »

நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சர்வதிகார அரசு. படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் …

Read More »

நாமல் ராஜபக்சே ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்

      பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே  ஆஜராகியுள்ளார். இவர் இன்று (31) காலை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலங்கை இளைஞர் சபையில் இடம்பெற்ற தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

நாடாளுமன்ற வீதி விபத்து: பொலிஸ் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என சம்பிக்க

நாடாளுமன்ற வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் சட்டத்துக்கு கட்டுப்பட்ட பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் பொலிஸாரினது செயற்பாடுகளுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் தெரிவித்திருந்ததாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து …

Read More »

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் எட்டு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காரைநகருக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்கள் நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அவரகள் யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக …

Read More »

தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்: கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிப்பு

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு விபரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. இந்த கைதிகளின் விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிலர் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் கூறினார். …

Read More »

ஹரிஷ்ணவியின் உடலுடன் ஊர்வலம்…

வவுனியா உக்குளாங்குளத்தில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி கெங்காதரன் கரிஸ்ணவியின் சடலம் பெருந்திரளான மக்களின் அஞ்சலியின் பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் இடக்கம் செய்யப்பட்டது. வவுனியா உக்குளாங்குளத்தில் 13 வயதான மாணவி கெ. ஹரிஷ்ணவி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த சமயம் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார். இந் நிலையில் ஆசிரியையான தாயார் பாடசாலை முடிந்து வீடு வந்தபோது மகள் தூக்கில் …

Read More »

சம்பூர் அனல் மின்சார மையத்திட்டத்துக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி

திருகோணலை சம்பூர் அனல் மின்சார மையத்துக்கான சுற்றாடல் அனுமதியை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது. எனினும் இந்த அனுமதியின் கீழ் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை இலங்கை மின்சாரசபையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த திட்டம், பல்வேறு சர்ச்சைகள் காரணமாக பல வருடங்கள் பின்தள்ளிப் போயுள்ளது. இந்த நிலையிலேயே மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த …

Read More »

நான் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பவில்லை : டேவிட் கமரன்

பிரித்தானியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால், பிரான்ஸின் கலாய்ஸில் உள்ளது போன்று குடியேற்றவாசிகளின் கூடாரங்கள் தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில் தோன்றக்கூடும் என பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்ததாக கூறப்பட்டதை கமரன் மறுத்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், கலாய்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் வரும் மக்களின் கடவுச்சீட்டுக்கள் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்பதையே கமரன் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் …

Read More »

ஜனாதிபதி மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைன் இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையளார் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது . இதே வேளை செய்த் ராத் அல் ஹுசைனின் …

Read More »