Breaking News
Home / World / America

America

American News

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் ( Bill Johnson ) இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என  அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு  வந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் …

Read More »

உலகின் குண்டு மனிதருக்கு அறுவை சிகிச்சை வெற்றி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்தவர், ஜுவான் பெட்ரோ பிரான்கோ, 32. பல்வேறு காரணங்களால், இவரது உடல் எடை, 600 கிலோவாக அதிகரித்தது. இதையடுத்து, உலகின் மிக அதிக உடல் எடையுடைய நபர் என அழைக்கப்பட்டார். உடல் எடையால் சிரமப்பட்ட பிரான்கோ, எடை குறைப்பு சிகிச்சை பெற திட்டமிட்டார். மெக்சிகோவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரான்கோவிற்கு செய்யப்பட்ட எடை …

Read More »

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி பதவிநீக்கம்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐயின்  இயக்குநரான ஜேம்ஸ் கோமியை அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் ரம்ப்  பதவிநீக்கம் செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலின் போது ரஸ்யாவின் தொடர்பு பற்றி கோமி விசாரணை நடத்தி வந்தார். விசாரணை வேகமாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில், கோமி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வெளியுறவு செயலராக ஹிலரி கிளிண்டன் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி …

Read More »

மனிதர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் பூமியை விட்டு 100 வருடங்களுக்குள் செல்லவேண்டும் : பிரபல விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்

மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார் மேலும் உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான …

Read More »

ட்ரம்பின் 100 நாள்! வரலாற்று சாதனை படைத்ததாக பெருமை

அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி தான் அதிபராக இருந்த நாட்கள் வெற்றிகரமான அமெரிக்க வரலாற்று சாதனை என பெருமை பொங்க டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு: வெற்றிகரமான வரலாற்று சாதனை என ட்ரம்ப் பெருமிதம் வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்றார். நேற்றுடன் அவர் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி, வானொலி …

Read More »

எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை; வடகொரியாவின் நான்காவது தொடர் தோல்வி

அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை பரிசோதனையொன்றை உள்ளூர் நேரப்படி 29.04.2017 அதிகாலை நடத்தியுள்ளது. அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா கைவிடாவிட்டால், பேரழிவுகளைச் சந்திக்க நேரும் என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கின் வட பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையும் தோல்வியிலேயே முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த …

Read More »

தொழில்சார் விசாவிற்கு அதிரடி கட்டுப்பாடு : கையொப்பமிட்டார் டிரம்ப்

அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டு வந்த H -1B தொழில்சார் விசாமீது கட்டுபாடுகளை விதிக்கும் சட்டவாக்கத்தில் கையொப்பமிட்டுள்ளார் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு தொழிநுட்ப மற்றும் துறைசார் பணிகளில் வெளிநாட்டினரின் பங்கை குறைத்து உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு H -1B விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தமைக்கு ஏற்ப அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் வைத்து உடனடியாக அமுலில் வரும்படியான புதிய விசா …

Read More »

இளம் மாணவியின் உயிரைப் பறித்த ‘கேக்’!

கேக் சாப்பிடும் போட்டியொன்றில், இளம் மாணவி ஒருவர் கேக் துண்டு தொண்டையில் அடைத்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கெயிட்லின் நெல்சன் (20) அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவக் கல்லூரி மாணவி. தோற்றத்தில் அழகானவர் மட்டுமன்றி படிப்பிலும் கெட்டிக்காரி. கல்லூரியில் அண்மையில் பான்கேக் சாப்பிடும் போட்டியொன்று நடைபெற்றது. இதில் கெயிட்லினும் கலந்துகொண்டார். போட்டி ஆரம்பித்த சில நொடிகளில் மளமளவெனக் கேக்குகளைச் சாப்பிட ஆரம்பித்த கெயிட்லின், நான்காவது துண்டைச் சாப்பிடும்போது எதிர்பாராத …

Read More »

மின்னஞ்சலை உருவாக்கிய தமிழர் அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் டிரம்ப் அணியில்

மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்ட அமெரிக்கப் பாராளுமன்றத்தில் மேலவையில் சில வெற்றிடங்கள் உள்ளன. அதை நிரப்பும் வகையில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் சிவா ஐயாத்துரை போட்டியிடவுள்ளார். ‘சைட்டோசோல்வ்’ எனும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் சிவா ஐயாத்துரை, நீண்ட காலமாக அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது வாழ்ந்துவரும் மசாசூசெட்ஸ் மாகாணம் சார்பிலேயே போட்டியிடவுள்ளார். …

Read More »

வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க் சக்கபேர்க்

பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை …

Read More »