Breaking News
Home / World / Germany

Germany

Germany News

ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு

ரஸ்யா இணையத் தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி; அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெர்மனியின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தி ஜெர்மனியின் முக்கிய தகவல்களை ரஸ்யா சேகரித்துள்ளதாகவும் இந்த தாகவல்கள் சில  வேளைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பயன்படுத்தப்படலாம் எனவும் ஜெர்மனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரஸ்யா இவ்வாறு சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் …

Read More »

உலகிலேயே சிறந்த மனிதர் ஹிட்லர்’: பெண் கவுன்சிலரின் கருத்திற்கு கிடைத்த தண்டனை

’ஜேர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் தான் உலகிலேயே சிறந்த மனிதர்’ என கருத்து தெரிவித்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் கவுன்சிலர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Luton என்ற நகருக்கு Aysegul Gurbuz என்ற பெண் கவுன்சிலராக பதவி வகித்து வந்துள்ளார். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியை சேர்ந்த இவர் நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை செய்தபோது, கவுன்சிலரின் டுவிட்டர் …

Read More »

இரண்டாக உடைந்த ஜேர்மனியை இணைத்த மாபெரும் அரசியல் தலைவர்: உடல்நலக்குறைவால் காலாமானார்

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இரண்டாக பிரிந்த ஜேர்மனியை மீண்டும் இணைக்க போராடி வெற்றிக்கண்ட மாபெரும் அரசியல் தலைவர் நேற்று முன் தினம் காலாமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்ற பின்னர் ஏற்பட்ட விளைவுகளால் ஜேர்மனி நாடு கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியாக இரண்டாக உடைந்தது. இதன் பின்னர் ஜேர்மன் சுவரும் எழுப்பப்பட்டது. இந்த நேரத்தில் மேற்கு ஜேர்மனி அரசாங்கத்தின் வெளியுறவு துறை அமைச்சராக Hans-Dietrich Genscher பணியாற்றி …

Read More »

ஜேர்மனில் அகதி முகாம்களில் பாலியல் தாக்குதலை தடுக்க 200 மில்லியன் ஒதுக்கீடு..!

ஜேர்மனி நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் நிகழும் பாலியல் தாக்குதலை தடுக்க அந்நாட்டு அரசு 200 மில்லியன் யூரோ நிதியை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டு தொடங்கியது முதல் ஜேர்மனியில் பாலியல் தாக்குதல் விவகாரம் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது. குடிமக்கள் மீது அகதிகள் பாலியல் தாக்குதலை நடத்துவது, அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி …

Read More »

‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்

ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு அந்நாட்டு குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் நிரந்திர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யும் புதிய சட்டம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான தாராள கொள்கைகள் அந்நாட்டு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதையே …

Read More »

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தாக்குதல் விவகாரம்: சிக்கிய முதல் குற்றவாளி!

ஜேர்மன் நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முதல் குற்றவாளி மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne நகரில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடியுள்ளனர். அப்போது, இந்த கூட்டத்திற்குள் நுழைந்த சுமார் 1,000 நபர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள பெண்கள் மீது பாலியல் …

Read More »

சிரிய அகதிகளின் மனிதாபிமானம்!

ஜேர்மனியில் கார் விபத்தில் சிக்கிய இடதுசாரி கட்சியின் முன்னணி வேட்பாளரான Stefan Jagsch – ஐ இரண்டு சிரிய அகதிகள் காப்பாற்றியுள்ளனர். ஜேர்மனியின் இடது சாரி கட்சியான NPD – யின் முன்னணி வேட்பாளராக இருக்கும் Stefan Jagsch என்பவர், காலை 9.00 மணியளவில் büdingen நகருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, காரினை ஓட்டிச்சென்ற ஓட்டுநர், ரோட்டின் பக்கவாட்டில் உள்ள மரத்தின் மீது காரினை மோதியதில், அதில் இருந்த Stefan …

Read More »

புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை எப்படி திருப்பி அனுப்புவது?: புது வழி கண்டுபிடித்த ஜேர்மனி (வீடியோ இணைப்பு)

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை அவர்களின் தாய்நாடுகளுக்கு எப்படி திருப்பி அனுப்புவது என்பது தொடர்பான நீண்டகால பிரச்சனைக்கு அந்நாட்டு அரசு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் ‘அகதிகளுக்காக ஜேர்மனியின் கதவுகள் திறந்து இருக்கும்’ என்ற தாராள கொள்கையின் விளைவாக தற்போது ஜேர்மனியில் சுமார் 7,70,000 பேர் புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், குடியமர்வு துறை அதிகாரிகள் பேசியபோது, ‘இந்த எண்ணிக்கையில் …

Read More »

’’எவ்வளவு தடைகள் வந்தாலும் அகதிகளுக்காக போராடுவேன்’’: ஜேர்மன் சான்சலர் அதிரடி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு தடைகளை மீறி ஆதரவு அளிப்பேன் என ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்துள்ளார். ஜேர்மன் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் நேற்று பங்கேற்றுள்ளார். அப்போது, ‘அதிக அளவில் அகதிகளை அனுமதிப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து உருவாகும் என கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால், நான் எடுத்துக்கொண்ட பணியில் இருந்து ஒருபோதும் …

Read More »

ஜெர்மனியில் 1.30 லட்சம் அகதிகளை காணவில்லை: அரசின் அதிர்ச்சி தகவலால் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

ஜேர்மனி நாட்டில் கடந்தாண்டு குடியேற வந்த சுமார் 1,30,000 அகதிகளை காணவில்லை என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், “ஜேர்மனிக்கு குடியேற வந்த புலம்பெயர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட அரசு மையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். ஆனால், இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1,30,000 பேர் அரசுக்கு தெரியாமல் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை பெறப்படவில்லை. …

Read More »