Breaking News
Home / World / Other countries

Other countries

Other countries News

மெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை

மெக்ஸிக்கோ சிறைச்சாலை ஒன்றில் இரகசிய சுரங்கப் பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையில் போதைப் பொருள், கூரிய ஆயுதங்கள் மற்றும் மதுபான வகைகள் போன்றன காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்ஸிக்கோவின் றெய்நோஸா (reynosa   )நகரில் இந்த சிறைச்சாலை அமைந்துள்ளது. மெக்ஸிக்கோவின் சில சிறைச்சாலைகளிலிருந்து சில கைதிகள்  சுரங்கப்பாதைகளை அமைத்து அதனூடாக  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையினூடாக எவரும் இதுவரையில் தப்பிச் செல்லவில்லை …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்:8 பேர் பலி

சீனாவின் மேற்கு ஷின்ஜியாங் பகுதியில் இன்று காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை நில அதிர்வுகளும் உணரப்பட்டதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Read More »

தென் கொரிய அதிபராக மூன் ஜேயின் பதவியேற்பு

தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில், மூன் ஜேயின், 64, வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று அவர், அதிபராக பொறுப்பேற்றார். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், முன்னாள் பெண் அதிபர், பார்க் குன் ஹை, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இதில், கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, மூன் ஜேயின், 41 சதவீத …

Read More »

உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் – விளாடிமிர் புதின்

நாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதாகவும் இதனைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் 72-வது ஆண்டு வெற்றி தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் விளாடிமிர் புதின் மேற்படி தெரிவித்துள்ளார். உலகின் தலையெழுத்தை நாங்கள்தான் தீர்மானிப்போம் என ஜெர்மனியின் நாஜிக்கள் நினைத்ததால் இரண்டாம் உலகப்போர் வெடித்தெனவும் …

Read More »

பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலை

பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி டுரணை Luiz Inácio Lula da Silva  நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். ஊழல் மோசடிகள் குறித்த வழக்கு ஒன்றின் விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில்  முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளன. பிரேஸிலின் 100 அரசியல்வாதிகளுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி  Luiz Inácio Lula da …

Read More »

சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி

சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான  Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh  கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த …

Read More »

வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும்  அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா  விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட …

Read More »

பெண்கள் ஆடைமாற்றுவதை இரகசியமாக படம்பிடித்து விற்பனை செய்த பெண்ணிற்கு சிறை

சிங்கப்பூரிலுள்ள உடற்பயிற்சிக்கூடம் (Gym) ஒன்றில், பெண்கள் ஆடை மாற்றுவதை இரகசியமாக வீடியோ  பதிவுச்செய்து விற்பனை செய்த யுவதியொருவருக்கு  30 வார கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹெங் லீ யிங் (Heng Li Ying) எனும் 29 வயதான யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சிக் கூடமொன்றில் பெண்கள் ஆடை மாற்றும் பகுதியில் பெண்கள்  ஆடை மாற்றுவதை இரகசியமாக படம்பிடித்ததாகவும் அவ்வீடியோ காட்சிகளை விற்பனை செய்ததாகவும் குறித்த யுவதியின் மீது குற்றம் …

Read More »

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 35பேர் பலி : ஈரானில் சம்பவம்

நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றியபோது ஏற்பட்ட வெடி விபத்துகாரணமாக சுமார் 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது ஈரானின் வடக்குப் பகுதியிலுள்ள ஸெமெஸ்டான்யுர்ட் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து காரணமாக, சுமார் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் வெடி விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவில் சுமார் 50 பேர்வரையில் சிக்கிக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன மேலும் குறித்த விபத்தில் காயமுற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், …

Read More »

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணம்?

இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்படும் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகவும், இதனை பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து மறைப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. 1980-களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில், அந்த நாடு மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் பின்னணியில் தான் 1993-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் …

Read More »