Breaking News
Home / World / Other countries (page 17)

Other countries

Other countries News

லிபியாவில் 3 மில்லியன் பீப்பாய்களை சேதப்படுத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்! (படங்கள் இணைப்பு)

  லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் கிடங்குகள் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 5 எண்ணெய் கிடங்குகளின் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எண்ணெய் சேகரித்து வைத்திருக்கும் பகுதிக்கு திடீரென்று புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் கடுமையாக திருப்பி தாக்கவே அங்கிருந்து தப்பிய தீவிரவாதிகள் தூரத்தில் இருந்து எண்ணெய் கிடங்கு …

Read More »

மலேசிய விமானத்தின் பாகம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு…!

தெற்கு தாய்லாந்தில் நக்கோன் தமாரத் பிராந்திய கடற்கரையில் நேற்று விமானம் ஒன்றினது பெரிய பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 மீட்டர் அளவிலான அகலமும், 3 மீட்டர் நீளமான இந்த விமானத்தின் பாகமானது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணமல் போன எம். எச். 370 மலேசிய விமானமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலாலம்பூரில் இருந்து சீன – பீஜிங் நகரை நோக்கி 239 பயணிகளுடன் பயணித்த எம். …

Read More »

ரஷ்ய அதிபர் புடின் சிறுவனுடன் உடலுறவு கொண்டார்! குழப்பத்தை உண்டாக்கிய ராபர்ட் ஓவன் அறிக்கை….

ரஷ்ய அதிபர் புடின் சிறுவனுடன் உடலுறவு கொண்டார் என்ற முன்னாள் உளவாளியின் கூற்றால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் அதிகாரியான அலெக்ஸாண்டர் லித்வினென்கோ, லண்டனில் ஹோட்டல் ஒன்றில் பொலோனியம் நச்சு கலந்து தேநீரை பருகியதன் காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராபர்ட் ஓவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. லித்வினென்கோவின் மரணத்தில் ரஷ்ய அதிபர் புடினுக்கு தொடர்பு இருப்பதாக …

Read More »

கிரீஸ் அருகே சிரிய அகதிகள் படகு கவிழ்ந்தது: 21 பேர் பலி

  உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப …

Read More »

சீனாவின் மென்யுவானில் இன்று நிலநடுக்கம்

சீனாவின் மென்யுவானில் இன்று (21) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீனாவின் மென்யுவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் 40 கட்டடங்கள் அழிவடைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்கள் பதிவாகவில்லை. 3.4 ரிக்டர் அளவில் முதலாவது நில நடுக்கம் பதிவானதாகவும், பின்னர் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாகவும் சீன நிலநடுக்க வலையமைப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் காணாமற்போன மற்றும் காயமடைந்தோரை மீட்பதற்காக பொலிஸார் மற்றும் …

Read More »

ஊடகவியலாளர்கள் கார் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்:7 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபுலில் ஊடகவியலாளர்களை ஏற்றிச் சென்ற காரொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் ரஷ்ய தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் முதலாவது 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி சேவையொன்றின் ஊடகவியலாளர்கள் சென்ற காரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் அடங்குவதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொலைக்காட்சி …

Read More »

மாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்சை: சகோதரரை பிணையாக்கியது அரசு

பயங்கரவாத வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாலைத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீர் (48), மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டன் செல்லவுள்ளார். தனது பதவிக் காலத்தின்போது குற்றவியல் நீதிபதியைக் கைது செய்தது தொடர்பாக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது நஷீருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது முதுகில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா, இலங்கை, பிரிட்டன் ஆகிய நாடுகளின் …

Read More »