Breaking News
Home / Cinema / தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தது அம்பலம்!

தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தது அம்பலம்!

1

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது காதலன் ராகுல் சிங்கும் தனிமையில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த முடிவை தேடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக தான் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனிடையே, இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ராகுல் சிங் முன்ஜாமீன் பெற்றார். அவரது முன்ஜாமீன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்கொலை செய்து கொண்ட 24 வயது டி.வி. நடிகை பிரதியுஷா, கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருப்பையில் மேற்கொண்ட சோதனையில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரதியுஷா தன்னுடைய வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்திருக்கிறார். இந்த தகவலை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பிரதியுஷா தற்கொலை வழக்கில் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முன்னர், அவர் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Vaishnavi O

Check Also

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *