Breaking News
Home / Cinema / ரஜினிகாந்த் படத்துக்கு 330 கோடி ரூபாய் காப்புறுதி

ரஜினிகாந்த் படத்துக்கு 330 கோடி ரூபாய் காப்புறுதி

Rajinikanth

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அளவுக்கு இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டத்தில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எந்திரன் 2 எனப் பெயரிடப்பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அந்தப் படம் தற்போது தயாராகி வருகின்றது.

மிகப் பெரிய செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியத் திரைப்படத்துறையில் அண்மைக் காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன.

படப்படிப்பில் எதிர்பாராத வகையில் ஏற்படும் இடையூறுகள், கலைஞர்களின் உடல்நலக் குறைவால் உருவாகும் தாமதங்களால் ஏற்படும் நஷ்டங்கள், படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நாளில் அசம்பாவிதங்களால் தடைப்படுதல் போன்ற பல காரணங்களுக்காகவே திரைப்படங்கள் காப்புறுதி செய்யப்படுகின்றன

About Vaishnavi O

Check Also

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *