Breaking News
Home / Cinema / வைரலாகும் ரம்பா வீடியோ

வைரலாகும் ரம்பா வீடியோ

1992ஆம் ஆண்டு ‘சர்கம்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். இதே காலகட்டத்தில் தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மற்ற கதாநாயகிகள் நடிக்கத் தயங்கும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் ரம்பா. இதனால் விரைவில் பிரபல முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்களில் ஒப்பந்தமானார். சிரஞ்சீவியுடன் நடித்த ‘அல்லுடு மஜாகா’ என்னும் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் போட்டிபோட்டு கவர்ச்சிகாட்டி நடிக்க, படமும் பெரிய சூப்பர் ஹிட் ஆக, அடுத்த பத்தாண்டுகளில் யாராலும் அசைக்கமுடியாத நடிகையாக மாறினார்.

தமிழில் கார்த்திக்குடன் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘ உள்ளத்தை அள்ளித் தா’ படம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்தேபோதே இந்தியில் அஜய் தேவ்கன், சல்மான்கான், கோவிந்தா படங்களில் நடிக்க ஆரம்பித்து அகில இந்திய நடிகையாக மாறினார். திறமையாக நடனம் ஆடத் தெரிந்த நடிகை மட்டுமல்ல; நடிக்கவும் தெரிந்த நடிகை என்பதை பல படங்களில் ரம்பா நிரூபித்து இருக்கிறார். அவர் நடிக்காத தென்னிந்திய மொழிப் படங்களே கிடையாது. போஜ்புரி மொழியில் 5 படங்கள் நடித்து இருக்கிறார். அத்தனையும் அங்கு சூப்பர்ஹிட் படங்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நடிகையாக வலம்வந்த நடிகை ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆடம்பரமாக அத்தனைபேரும் பார்த்து பொறாமைப்படும் அளவில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இவர்களிடையில் விவாகரத்து வழக்கும் நடந்துவந்தது.

இந்நிலையில், கணவருடன் தன்னை சேர்த்துவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விருப்ப மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது ரம்பாவுடன் சேர்ந்து வாழ அவரது கணவரும் விருப்பம் தெரிவித்ததன்பேரில் இருவரும் தற்போது சேர்ந்துள்ளனர். இருவரும் சேர்ந்த பிறகு தங்களது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து முதல் தரிசனமாக திருப்பதி சென்று ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்துள்ளனர். தெலுங்கு செய்தித்தாள்கள் அனைத்தும் இந்தச் செய்தியை பகிர்ந்துள்ளனர். இவர்கள் தரிசனம் செய்து குடும்பத்துடன் கோயிலில் இருந்து வெளிவரும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Actress-rambha-kuruvi

About Prasanthraj Soundararajan

Check Also

இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே!

ஐ.பி.எல்.தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பூனே அணிகள் பலப்பரீட்சை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *