உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.
இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதன்மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 29-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.