Breaking News
Home / Entertainment / என் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா?

என் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா?

Lyrics – Pallavy

Female : என் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா? என்மார்பில் தூங்கும் இருள்நேர வீரா உனைத்தேடும் நேரம் என்நெஞ்சம் ஏங்கும் ஏனடா?

Male : உன்முத்தம் சேர்கையில் நீராகிறேன், நீ எந்தன் வானமானால் நான் உன்மேல் நீந்தும் மேகம்!

Saranam 1

Male : வேண்டும் நீ வேண்டும் மழை தூறும் நேரத்தில்
Female : மீண்டும் இது தோன்றும் என் தேகம் வெள்ளத்தில்…

Male : வாசம் உன் வாசம் அதைத் தேடும் என் சுவாசம்
Female : போதும் இது போதும் ஒரு நூறு ஜென்மங்கள்!

Female : சிலபொழுது நண்பன் ஆனாய் பலபொழுதென் பிள்ளை நீ!
Male : தலையணையில் தூக்கம் தொலைத்தே உனதுடலில் சாய்கிறேன்!

Female : காதிலே ஓர்கதை நான் கூறவா?
Male : செல்லமாய் ஓரிதழ் நான் தரவா?

Saranam 2

Female : பார்த்தேன் உனைப் பார்த்தேன் ஓர்நாள் என் பயணத்தில்
Male : கேட்டேன் உடன் கேட்டேன் எனைக் காதல் செய் என்றே!

Female : ஏனோ அது ஏனோ நான் வாசல்வரை வருவேன்
Male : நோகும் உயிர் நோகும் உனை நீங்கும் தருணத்தில்,

Female : பலசமயம் நாணம் இழந்தேன் உனதருகில் ஸ்நேகிதா
Male : சிலசமயம் பூமி மறந்தேன் உனதுஅன்பில் ஸ்நேகிதி

Female : உன்தலை கோதியே நான்தொட வா
Male : என்நிலை கூறினேன் உன்விடை தா!

About Prasanthraj Soundararajan

Check Also

கல்யாணம் அன்றும் இன்றும்…

  ஒரு 25 வருடங்களுக்கு முன்பு, கல்யாணம் என்றாலே அது மூன்று நாட்கள் விசேஷமாக இருக்கும் … வீடே கலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *