Breaking News
Home / India / எனக்கும் என் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா….!’ – நெகிழும் ஜெயலலிதா!

எனக்கும் என் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா….!’ – நெகிழும் ஜெயலலிதா!

2

திரையுலகில் 17,695 திரைப்பட பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனைப்புத்தககத்தில் இடம்பெற்றுள்ளார் பின்னணி பாடகி சுசீலா. ஜெயலலிதா திரையுலகில் அறிமுகமான வெண்ணிற ஆடை படத்திலிருந்து அவர் நடித்த பல படங்களில்,  அவருக்கு சாகாவரம்பெற்ற பல பாடல்களை பாடியவர் சுசீலா.

மேலும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிற்கு நெருங்கிய தோழியுமான சுசீலாவின் கின்னஸ் சாதனைக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில்,  தன் தாயாருக்கு சுசீலா பின்னணி பாடல்களை பாடியதையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துக்கடிதம்…

” தாங்கள் மிக அதிகமான  பாடல்களைப் பாடியதற்கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  இந்த சாதனைக்கு எனது பாராட்டுதல்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் சிறிய வயதிலிருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, தங்களது கடின உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளீர்கள்.  திரைப் படங்களில் எனக்கு மட்டுமின்றி எனது தாயாருக்கும் தாங்கள் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளீர்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் நான் நினைவு கூருகிறேன். பல திரைப்படங்கள் தங்களின் இனிய குரல் வளத்தினாலேயே பெருமை அடைந்தன என்றால் அது மிகையில்லை.

17,695 திரைப்பட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையாளராக புகழ் பெற்றுள்ள தாங்கள் இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடி தமிழ் இசைக்கும், இசைத் துறைக்கும் சேவையாற்ற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன்”

இவ்வாறு தனது வாழ்த்துச்செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

About Vaishnavi O

Check Also

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியரைத்தான் பார்க்க வேண்டும் ; மனோ கணேசன்

நீரெல்லாம் திருந்தவே மாட்டீரா, உமக்கு மூளையில் சுகமில்லை. உமது பைத்தியத்தை சுகப்படுத்த, இந்தியா வழங்கிய இலவச அம்பியுலன்ஸில் ஏற்றி, இந்திய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *