Breaking News
Home / India / குஜராத்தை வீழ்த்தி தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியது ஹைதராபாத்!

குஜராத்தை வீழ்த்தி தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியது ஹைதராபாத்!

ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளது

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் ஆரம்ப ஜோடியான ஸ்மித் மற்றும் இசான் கிசன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 111 ஓட்டங்களை குவித்தனர்.

எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குஜராத் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டஙக்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பில் இசான் கிசான் 61 ஓட்டங்களையும், ஸ்மித் 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் வோர்னர் 69 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹைதராபாத் அணியின் மொஹமட் சிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளை பெற்று ஹைதராபாத் அணி 2வது இடத்தை பிடித்துள்ளதுடன், தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Sunrisers Hyderabad captain David Warner plays a delivery square during match 53 of the Vivo 2017 Indian Premier League between the Gujarat Lions  and the Sunrisers Hyderabad held at the Green Park Stadium in Kanpur, India on the 13th May 2017 Photo by Shaun Roy - Sportzpics - IPL
Sunrisers Hyderabad captain David Warner plays a delivery square during match 53 of the Vivo 2017 Indian Premier League between the Gujarat Lions and the Sunrisers Hyderabad held at the Green Park Stadium in Kanpur, India on the 13th May 2017
Photo by Shaun Roy – Sportzpics – IPL

About Prasanthraj Soundararajan

Check Also

இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே!

ஐ.பி.எல்.தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பூனே அணிகள் பலப்பரீட்சை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *