Breaking News
Home / Sports / தாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்

தாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் ஆடுகளத்தில் அதிரடியில் மிரட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டை போலவே காதல் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.

டிவில்லியர்ஸ் டேனியலி ஸ்வார்ட் என்பவரை 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதாவது 5வது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுக் கொண்டிருந்த போது அவர் டேனிலியை மணந்தார்.

அனைவரையும் போன்று இவர்களின் காதல் வாழ்க்கையும் அழகானது. இவர்கள் இருவரின் குடும்பமும் மிக நெருங்கி நண்பர்கள். இதனால் இருவரும் நெருங்கி பழக அதிக வாய்ப்பு கிடைத்தது.

டேனியலி தந்தையின் விவசாய நிலத்தில் தான் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். நட்பாக தொடர்ந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் காதலின் சின்னமான தாஜ்மஹால் முன்பு வைத்து தான் தனது காதலை டேனியலிடம் கூறியுள்ளார் டிவில்லியர்ஸ். இதைத் தொடர்ந்தே இவர்களின் திருமணம் நடந்தது.

டிவில்லியர்ஸ்- டேனியல் தம்பதிக்கு கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

About Prasanthraj Soundararajan

Check Also

குஜராத்தை வீழ்த்தி தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியது ஹைதராபாத்!

ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *