Breaking News
Home / Sports / யுவராஜ் சிங்கிற்கு காயம்: இந்திய அணிக்கு புதிய சிக்கல்

யுவராஜ் சிங்கிற்கு காயம்: இந்திய அணிக்கு புதிய சிக்கல்

yuvi_injuring

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

எதிர்வரும் 31ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யுவராஜ் சிங் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், அவருக்கு பதிலாக கர்நாடாகவை சேர்ந்த மணிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

About Vaishnavi O

Check Also

ஐ.பி.எல். தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நான்கு அணிகள்?

இந்த வருட ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *