Breaking News
Home / World / America / உலகின் குண்டு மனிதருக்கு அறுவை சிகிச்சை வெற்றி

உலகின் குண்டு மனிதருக்கு அறுவை சிகிச்சை வெற்றி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்தவர், ஜுவான் பெட்ரோ பிரான்கோ, 32. பல்வேறு காரணங்களால், இவரது உடல் எடை, 600 கிலோவாக அதிகரித்தது. இதையடுத்து, உலகின் மிக அதிக உடல் எடையுடைய நபர் என அழைக்கப்பட்டார்.
உடல் எடையால் சிரமப்பட்ட பிரான்கோ, எடை குறைப்பு சிகிச்சை பெற திட்டமிட்டார். மெக்சிகோவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரான்கோவிற்கு செய்யப்பட்ட எடை குறைப்பு அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாகவும், தொடர்ந்து டாக்டர்களின்
கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்கோவின் உடல் எடை எவ்வளவு குறைந்து உள்ளது என்பது பற்றிய விபரங்கள், மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லைheavyweight-kuruvinews

About Prasanthraj Soundararajan

Check Also

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *