Breaking News
Home / World / Other countries / நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 35பேர் பலி : ஈரானில் சம்பவம்

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 35பேர் பலி : ஈரானில் சம்பவம்

நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றியபோது ஏற்பட்ட வெடி விபத்துகாரணமாக சுமார் 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது

ஈரானின் வடக்குப் பகுதியிலுள்ள ஸெமெஸ்டான்யுர்ட் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து காரணமாக, சுமார் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் வெடி விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவில் சுமார் 50 பேர்வரையில் சிக்கிக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன

மேலும் குறித்த விபத்தில் காயமுற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு மீட்பு படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்தோடு குறித்த விபத்து காரணமாக, சுமார் 2 கிலோமீற்றர் நீளமான சுரங்கம் இடிபாடுகளுக்குட்பட்டுள்ளதனால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என ஈரானிய ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Iran1 iran2 iran3

About Prasanthraj Soundararajan

Check Also

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *