Breaking News
Home / World / England / லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது.

துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்காலில்  நடைபெற்ற அரச பயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான நாளாக உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

இனப்படுகொலையானது 2009 மே முள்ளிவாய்க்காலில் திடீரென நடந்து முடிந்ததல்ல. ஐநா அதிகாரிகளும், சர்வதேச ஊடகங்களும் மஹிந்த அரசால் வெளியேற்றப்பட்டு மூர்க்கத்தனமாக படை எடுக்கப்பட்டதால்  மட்டும் அரங்கேறியதும் அல்ல. சிங்கள பௌத்த பெரினவாதக்கட்டமைப்பு எப்போது உருவகம் பெற்றதோ, அன்றிலிருந்தே தமிழ் இனப்படுகொலைக்கான விதைகள் விதைக்கப்பட்டன. 1972 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவில் தொடங்கி இன்று 2009 மஹிந்தவில் முடிவுற்றது.

இன்னமும் அழிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் இலங்கை அரசை வெண்றெடுக்க தமிழீழ தலைவர் வருவாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் நம் இனத்தை காக்க நாம் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இப்போதோ குரல் எழுப்புகிறோம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கண்ணீர் மல்க கூறினார்.

தமிழீழத்தின் கதி என்ன என்பதை விட தமிழர்களின் கதி என்னவென யாருக்குமே தெரியாத நிலையில் நம் இனம் இருப்பதை பொறுக்க முடியாத கூட்டம் தான் நாம் என பலர்.

About Prasanthraj Soundararajan

Check Also

12 ஆயிரம் கிலோமீற்றர்களை 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்ற ரயில்..!

பிரிட்டன் மற்றும் சீனாவிற்கிடையே உலகின் இரண்டாவது மிக நீண்ட ரயில் பாதையினுடாக ’ஈஸ்ட் விண்ட்’ என்ற கொள்கலன் ரயிலானது 12 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *